Kogilavani / 2016 மே 13 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

'அகத்தியர் யோக ஞானத்திறவு கோல்' நூல், அறிமுக நிகழ்வு நாளை சனிக்கிழமை (14) மாலை 5.30 மணியளவில், வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில், இலங்கை பாரம்பரிய வைத்திய நிறுவகத்தின் தலைவரான மருத்துவர் திருமதி விக்னவேணி செல்வநாதன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் சின்மயா மிஷனின் ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக்ரத் சைதன்யா ; சிறப்புரை ஆற்றவுள்ளார்.
நூல் அறிமுகத்தை தொடர்ந்து, நூலின் விடயப்பரப்பு தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. இந்தத்துறையில் ஆர்வம் உள்ள அன்பர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றி பயன்பெறலாம்.
யோக ஞானக் கருத்துக்கள் கொண்ட சித்தர்பாடல்கள் இதுவரை நேரடியாக விளக்கம் கொடுக்கப்படாமல் இருந்துவந்தன. கொடுக்கப்பட்ட விளக்கங்களும் குறித்த ஞானநிலையை எய்தாத, வெறும்மொழியறிவுகொண்டோரினாலேயேதரப்பட்டுவந்தன. இந்தநிலையால், பலசித்தர்பாடல்கள்தவறாகப்பொருள்கொள்ளப்பட்டன.இப்பிரச்சினைகளைக்கருத்தில்கொண்டு,அதற்கேற்ற வண்ணம் விளக்கங்களுடன் கூடியிருக்கத்தக்க வண்ணமாக உருவாக்கப்பட்டுள்ள சித்தஞான விளக்க நூலே 'அகத்தியர் யாக ஞானத்திறவுகோல்'ஆகும்.
ஸ்ரீ ஸக்தி சுமனன் எழுதிய 223 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த பிரணவ்ஸ்தஸ்தானம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
38 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
38 minute ago
20 Dec 2025
20 Dec 2025