2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

'உள்ளமும் நல்லதும்' நூல் வெளியீடு

Niroshini   / 2015 நவம்பர் 08 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுமன்றத்தின் ஏற்பாட்டில் இலக்கிய கலாநிதி புலவர்மணி ஏ.பெரிய தம்பிப்பிள்ளையின் 37வது நினைவு தினமும் புலவர்மணியின் 'உள்ளமும் நல்லதும்' எனும் நூல் வெளியீடும் நேற்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு,குருக்கள்மடத்தில் நடைபெற்றது.

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுமன்றத்தின் தலைவர் கலாநிதி சி.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை ஓய்வுநிலை பேராசிரியர் எஸ்.சிவலிங்கம்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் மற்றும் இலக்கிய கலாநிதி புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவுப்பேருரையினை 'தமிழ் சூழலில் தொன்மங்களும் காப்பிய மரபுகளும்புத்தாக்கம் பெறுதல்' எனும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை ஓய்வுநிலை பேராசிரியர் எஸ்.சிவலிங்கம் நிகழ்த்தினார்.

அதனைத்தொடர்ந்து பிரதம அதிதிகளினால் புலவர்மணியின் 'உள்ளமும் நல்லதும்'நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நூல் வெளியீட்டை தொடர்ந்து நூல் அறிமுகவுரையினை கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் ரூபி வலன்ரினா பிரான்சிஸ் நிகழ்த்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .