Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
கவிஞரும் சமூக ஆய்வாளரும் மொழிபெயர்ப்பாளரும் சட்டத்தரணியுமான இரா.சடகோபன் எழுதிய கோப்பிக்கால வரலாறு ஆவண நூலான கண்டிச்சீமையிலே நூல் அறிமுக விழா நாளை சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஹட்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான எம்.திலகராஜ் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவரும் எழுத்தாளருமான சாஹித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் அறிமுகவுரையையும்; கல்விப் பணிப்பாளரும் கவிஞருமான சு.முரளிதரன் கருத்துரையையும் நூலாசிரியர் இரா.சடகோபன் ஏற்புரையையும் நிகழ்த்தவுள்ளனர்.
1820 களில் தமிழ்நாட்டின் பல கிராமங்களிலிருந்தும் பஞ்சப் பிழைப்புக்காக நாட் கூலியின் அடிப்படையில் இலட்சக்கணக்கானோர் வந்து சுமார் 130 மைல் தூரம் கால்நடையாக கண்டியைச் சென்றடைந்தனர். இதன்போது, வழியிலும் கண்டிச்சீமையிலும் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்த இலட்சக்கணக்கானோர், செத்துமடிந்து இந்நாட்டின் மலை, காடுகளில் மண்ணோடு மண்ணாக கோப்பிச்செடிகளுக்கிடையில் புதைந்து போன கண்ணீர்க்கதை கூறும் நூலே இது.
11 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
3 hours ago
3 hours ago