2025 மே 02, வெள்ளிக்கிழமை

1,000 கவிஞர்கள் கவிதைகள்

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

உலக கவிதைகள் வரலாற்றில், ஒரு பொக்கிச ஆவணமாய் உலா வரவிருக்கின்றது '1,000 கவிஞர்கள் கவிதைகள்' எனும் கவிநூல். அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ்க் கவிஞர்களின் தரமிகு கவிதைகளின் தொகுப்பாய் முகம் காட்டவிருக்கும் '1000 கவிஞர்கள் கவிதைகள்' நூலில் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் கவிதைகள் இடம்பெறும்.

ஈழத்தை மையமாகக் கொண்டு செயலாற்றும் இக்குழுமத்துக்கு உறுதுணையாக, அனைத்து நாடுகளிலும் செயலாற்றுநர்களும் கவிச்சேகரிப்பாளர்களும் இயங்குவர். இப்பெரு கவித்தொகுப்பு

நூலின் வெளியீட்டு விழாவானது தேர்வுக்குழுவினரால் தீர்மானிக்கப்படும் இடத்தில் ஒழுங்கு செய்யப்படும்.

கீழ்வரும் முறைமைகளுக்கு ஏற்ப கவிதைகள் ஏற்கப்படும்.

01. கருப்பொருளுக்கு வரையறை இல்லை.

02. கட்சிசார், சமூகத்தால் விரும்பப்படா தனிநபர் புகழ்ச்சிசார் கவிதைகள் ஏற்கப்படமாட்டாது.

03. கவிதையின் ஆகக்கூடிய‌ வரிகள் 35 ஆகும். இவ்வரிகளுக்கு குறைவாகவும் கவிதைகளை அனுப்ப முடியும். ஒருவர் ஒரு கவிதையை மாத்திரம் அனுப்பலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகளை அனுப்பி, தேர்வுக்குழுவின் விரும்;பிய ஒரு கவிதையை ஏற்கச் செய்யவும் அனுமதி உண்டு.

04. பங்கேற்கும் கவிஞர் கடவுச்சீட்டு அளவான புகைப்படம், அவர் சார்ந்த 70 சொற்களுக்கு உட்பட்ட சுயகுறிப்பையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

05. மேலதிக விடயங்களுக்கான தொலைபேசி எண்கள். இலங்கை 0094 775892351ஃ0094 775006796ஃ0094 773407243 சர்வதேசம் 001 416 6661855.

06. கவிதைகளை tamilkavithaikal1000@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது செயலியக்குநர், 1000 கவிஞர்கள் கவிதைகள், விஜய் அச்சுப் பதிப்பகம், மில் வீதி, வவுனியா, இலங்கை. என்ற முகவரிக்கோ அனுப்பி வைக்க முடியும்.

07. தொலைபேசி எண் பிரசுரிக்கப்படமாட்டாது. கவிஞர் விரும்பாவிடில் புகைப்படமும் பிரசுரிக்கப்படமாட்டாது.

08. கவிதையை அனுப்பும் கவிஞர் தாம் ஒரு படைப்பாளர் என்பதையும் அக்கவிதை தமது சுயகவிதை என்பதையும் சமூகத்தால் ஏற்கப்படக்கூடிய ஒருவரின் உறுதிப்படுத்தலுடன் அனுப்புதல் விரும்பத்தக்கது.  

09. கவிதைகள் தொடர்பாக விசாரணை செய்யவும் கவிதைகள் இணைத்தல், நிராகரித்தல் என்பவற்றுக்கும் தேர்வுக் குழுவுக்கு அதிகாரம் உண்டு.

10. இலங்கை மற்றும் இந்தியாவில் மாவட்ட ரீதியாக செயற்படும் செயலாற்றுநர்கள் ஊடாகவும் பிற நாடுகளின் கவிஞர்கள் அந்நாடுகளில் செயற்படும் செயலாற்றுநர்கள் ஊடாகவும் கவிதைகள் அனுப்ப முடியும். தவிரவும் பொது மின்னஞ்சல் மற்றும் தபால் முகவரிக்கும் கவிதைகளை அனுப்ப முடியும். நேரடியாகவும் கவிதைகளை ஒப்படைக்க முடியும்.

11. கவிதைகள் பெறப்படும் இறுதித் திகதி 15.03.2016.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X