Kanagaraj / 2014 மே 24 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு தமிழ் சங்கத்தின் 'சங்கத் தமிழ்' வெளியீடு வெள்ளிக்கிழமை(23) கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்றது.
கொழும்பு தமிழ் சங்கத்தின் தலைவர் ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கொழும்பு தமிழ் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜி.இராஜகுலேந்திரா சங்கத்தமிழ் நூலினை வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை திருமதி.யமுனா கணேசலிங்கம் பெற்றுக்கொண்டார்.
மேற்படி சிறப்பு பிரதிகளை முறையே டாக்டர்.தாசிம் அகமது, க.மு.தர்மராஜா, வினோதயன் அபயன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வின் தமிழ் வாழ்த்தினை பிரணவி சந்திரசேகரம்,கௌசிகா புலெந்திரன் ஆகியோரும், வரவேற்புரையை கொழும்பு தமிழ் சங்க இலக்கியக்குழச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியும் நிகழ்த்தியதுடன், நயவுரையினை இரத்மலான இந்துக் கல்லூரியின் ஆசிரியர் துணவியூர் கேசவனும், நன்றியுரையை கொழும்பு தமிழ் சங்க பொதுச் செயலாளர் தம்பு சிவசுப்ரமணியமும் நிகழ்த்தினர்.
இவ் வெளியீட்டு விழாவில், நாட்டியச் சுடரொளி மதுரா சண்முகநாதனின் நாட்டிய நிகழ்வும் இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago