Sudharshini / 2015 ஒக்டோபர் 26 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
இவ்வருடம் முதல் மட்டக்களப்பில் 'பாடுமீன் விருது' வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென பிரான்ஸ் பாடுமீன் அமைப்பு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் , கோட்ட மட்டத்தில் இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளன.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) பிற்பகள் 2மணிக்கு மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இந்த விருது வழங்கும் வைபவம் நடைபெறவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விருது வழங்கும் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடாத்தப்படுமெனவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago