Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித், வடிவேல் சக்திவேல்
சமூக சேவையாளர் அமரர்.சி.மயில்வாகனத்தின் நினைவுச்சுவடுகள் தாங்கிய 'மனிதத்துவத்தை மதிப்போம்' எனும் தலைப்பில் நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை (29) கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிஷன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பேராசிரியர் மா.செல்வராசாவின், தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சமூக சேவையாளர் அமரர்.சி.மயில்வாகனத்தின்; சேவையின் மகத்துவத்தினை பாராட்டி அவரது மனைவிக்கும், பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஓய்வுபெற்ற கொத்தணி அதிபர் ச.சந்திரசேகரத்திற்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் தலைவர்,பேராசிரியர் மா.செல்வராசாவிடமிருந்து பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஓய்வுபெற்ற கொத்தணி அதிபர் ச.சந்திரசேகரம்; முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், ஆசிரிய வளநிலைய முகாமையாளர் சி.குருபரன், அதிபர்களான, வே.மகேசரெத்தினம், திருமதி.யோ.ஞானப்பிரகாசம், அரச உத்தியோகத்தர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
3 hours ago
31 Aug 2025
31 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
31 Aug 2025
31 Aug 2025