Niroshini / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்
மருதமுனை எம்.எம்.நௌபல் எழுதிய 'மிதக்கும் கனவுகள்' எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
உதவிக் கல்விப் பணிப்பாளர் சத்தார் எம்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலாநிதி ஏ.ஏ.முகம்மது நுபைல்,கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயில் மற்றும் கல்முனை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நூலின் முதல் பிரதியை கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாய்டீன் பெற்றுக்கொண்டார்.
சிறப்புப் பிரதிகளை ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத்,ஹென்டி கெப் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் மட்டக்களப்பு பிராந்தியப் பொறுப்பாளர் ஏ.ஜி.கலீலுர் றகுமான் ஆகியோரும் மர்ஹூம் ஏ.எச்.எம்.மஜீட் நினைவுப் பிரதியை கல்முனை பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முகர்ரப் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.


20 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
52 minute ago
1 hours ago