2025 நவம்பர் 22, சனிக்கிழமை

கம்பன் விழா – 2014

Super User   / 2014 ஜூன் 08 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.குகன் 

அகில இலங்கைக் கம்பன் கழகம் நடத்தும் 'கம்பன் விழா 2014' எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13) முதல் ஆரம்பமாகி தொடர்ந்து 3 நாட்கள் யாழில் இடம்பெறவுள்ளது.

காலை, மாலை அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த விழாவில் காலை அமர்வுகள் நல்லூர் கம்பன் கோட்டத்திலும், மாலை அமர்வுகள் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்திலும் இடம்பெறவுள்ளது.

'கம்பநாடகக் கீர்த்தனை – 2013' என்றும் இறுவெட்டு வெளியீடு, பட்டிமன்றங்கள், பேருரைகள் என்பன இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளன.

முதல் நாள் நிகழ்விற்கு வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானமும் இரண்டாம் நாள் நிகழ்விற்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் வே.கா.கணபதிகப்பிள்ளையும் மூன்றாம் நாள் நிகழ்விற்கு பேராசிரியர் ம.சின்னத்தம்பியும் தலைமை வகிக்கவுள்ளனர்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X