2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கதிரவன் சஞ்சிகையின் 10ஆவது வெளியீடு

Kogilavani   / 2012 மே 21 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் கதிரவன் சஞ்சிகையின் 10ஆவது வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மூத்த எழுத்தாளர் இரா.நாகலிங்கம் சஞ்சிகையினை பிரதம அதிதிகளுக்கு வழங்கி சஞ்சிகை வெளியீட்டை ஆரம்பித்துவைத்தார்.

சஞ்சிகையின் ஆய்வுரையினை கவிஞர் செங்கதிரோன் எம்.கோபாலகிருஸ்ணனும் ஏற்புரையை  கதிரவன் ஆசிரியர் இன்பராசாவும் நிகழ்த்தினார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .