2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியாவில் 4 கலைஞர்கள் ஆளுனர் விருதுக்கு தெரிவு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                                            (நவரத்தினம்)
வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடம்தோறும் வழங்கப்படும் ஆளுனர் விருது இம்முறை வவுனியாவை சேர்ந்த 4 பேருக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கலாபூஷனம் ம.பொ.தைரியநாதன் (இசை நாடகம்), கலாபூஷனம் க.கனகேஸ்வரன் (மிருதங்கம்), கலாபூஷனம் மனிக்கு பதுகே குணதிலக (மரச்சிற்பம்), கலாபூஷனம் மொகமட் அலியார் மொகமட் சரீப் (பாரம்பரிய மருத்துவம்) ஆகியோரே இவ் விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆளுனர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை வட மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களில் ஆளுனர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டள்ளவர்களின் விபரம்

யாழ்ப்பாண மாவட்டம்

ஏ. பேர்க்மன் ஜெயராசா (இசை நாடகம்), பண்டிதர் எம். கே. கடம்பேஸ்வரன் (இலக்கியம்), புலவர் ம.பார்வதி நாதசிவம் (கவிதை), வல்லிபுரம் செல்லத்துரை ( சங்கீதம்), செல்லத்துரை ராசா (மோர்சிஸ்)

மன்னார் மாவட்டம்

சந்தியா அந்தோனி மார்ன்டா (நாடகம்)

கிளிநொச்சி மாவட்டம்

தங்கரட்ணராசா ஜெகநாதன் (இலக்கியம்)

முல்லைத்தீவு
திருமதி மயில்வாகனம் தவமணி ( நாடகம்)

இவர்களுக்கான விருதுகள் வடமராட்சி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ள வட மாகாண இலக்கிய பெருவிழாவில் வழங்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .