2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

விபுலானந்த அடிகளாரின் 67 ஆவது நினைவு தினம்

Kogilavani   / 2014 ஜூலை 18 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்


முத்தமிழ் வித்தகரான சுவாமி விபுலானந்த அடிகளாரின் 67 ஆவது நினைவு தின நிகழ்வுகள் இன்று (18) கிழக்கு பல்கலைக்கழக அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது.

அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே. பிரேம்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நகழ்வில் பாணிப்பாளர், அடிகளாரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்நிகழ்வில் இசைத்துறை மாணவர்களால் விபுலானந்தர் பாடல், தமிழ்த் தாய் வணக்கம் மற்றும் நடனத்துறை மாணவர்களால் வரவேற்பு நடனமும் நிகழ்த்தப்பட்டன.

 கலாநிதி கே. பிரேம்குமார் ஆதார சுருதியுரையை நிகழ்த்தி சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு பொருட்கள் அடங்கிய அரும்பொருள் காட்சியகத்தை இதன்போது திறந்து வைத்தார்.

 திருமலை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடாதிபதி எஸ். பாஸ்கரன், பேராசிரியர் மா. செல்வராஜா, பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பிரதிப் பதிவாளர் து. விஜயகுமார், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் ஏ.ஜே. கிருஷ்டி   உட்பட பலர் கலந்து
கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X