Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மே 16 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.கோகிலவாணி)
'பிடில் மற்றும் நடனம், நோர்வேயின் பாரம்பரியத்தினூடான ஓர் பயணம்' எனும் தொனிப்பொருளில் இசை, நடன நிகழ்ச்சியொன்றை இந்திய கலாசார நிலையத்துடன் இணைந்து நோர்வே தூதரகம் இன்று நடத்தியது.
நோர்வே தூதரகம், கொன்சர்ட் நோர்வே, அருஸ்ரீ கலையகம், மற்றும் சேவா லங்கா ஆகியன இணைந்து ஏற்படுத்திய இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையிலான பரந்த இசைக் கூட்டுறவின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
கொழும்பிலுள்ள இந்திய கலாசார நிலையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில், நோர்வேயை சேர்ந்த சர்வதேச புகழ்பெற்ற கலைஞர்களான அன்ரிஸ் எல்ஜென்ஸ் (பிடில்) மற்றும் உல்ப் ஆர்னி ஜோன்ஸன் (பிடில் நடனக் கலைஞர்) ஆகியோர் பங்குபற்றினர்.
இக்கலைஞர்கள் இசை வழங்க, அதற்கு அருஸ்ரீ கலையகத்தின் மாணவர்களின் பரத நிகழ்வும், கண்டிய நடனமும் இடம்பெற்றன. அத்துடன் நோர்வேயிலிருந்து வருகைத் தந்திருந்த ஏனைய இசை கலைஞர்களின் இசை அரங்கேற்றமும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், நோர்வே தூதரகத்தின் தூதுவர், இந்திய கலாசார நிலையத்தின் பணிப்பாளர் எம். ராமச்சந்திரன், அருஸ்ரீ கலையகத்தின் இயக்குநர் அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். Pix By :- Kushan Pathiraja
22 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago