Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 23 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மணி அடித்தால் மட்டுமே கடை திறக்கணும் என்ற விசித்திரமான சம்பவம் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது
ஆந்திர மாநிலம் பிரகாச மாவட்டத்தில் போடிலி, படூர் போன்ற நகரப் பகுதிகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான கடைகள் அமைந்துள்ள நிலையில் அங்குள்ள வியாபாரிகள் ஒரு புதிய விதிமுறையை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறார்கள். அது என்னவென்றால், 60 வயது முதியவர் ஒருவர் தினமும் காலை 8 மணிக்கு சாலையில் மணி அடித்துக்கொண்டே செல்வார்.
அதன்பிறகு தான் அப்பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகளும் தங்களது கடையை திறந்து வியாபாரத்தை தொடங்குகிறார்கள். இது பல வருடங்களாக அவர்கள் கடைபிடித்து வரும் நிலையில் வெளியூர் மக்களுக்கு வித்தியாசமாக இருப்பதால் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
மணி அடிக்கும் பிரம்மய்யா என்ற நபர் பல வருடங்களாக இந்தப் பணியை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த வித்தியாசமான விதிமுறையை கடைவீதிகளில் உள்ள அனைத்து வியாபாரிகளும் பின்பற்றும் செயல் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago