2025 ஜூலை 23, புதன்கிழமை

சகாராப்பூக்கள் திரைப்பட பாடல் வெளியீட்டுவிழா

Kogilavani   / 2011 ஜூலை 19 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜெனா கே.சிவாவின் சகாராப்பூக்கள் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா, ஸ்காபுறேவில் இடம்பெற்றது.  

இந்நிகழ்வில், கலை உலகைச் சேர்ந்த பெருமளவான பிரமுகர்கள், திரைப்பட ரசிகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, சகாராப்பூக்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தொடர்பான பார்வையை கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன் ஆற்றியிருந்தார்.
வாழ்த்துரைகளை சகாராப்பூக்கள் திரைப்படத்தின் இசையமைப்பாளர் nஐகன், இசையமைப்பாளர் வர்மன், இயக்குநர் ரவி அச்சுதனுடன் நடிகர் சுதாகரனும் வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து சகாராப்பூக்கள் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் திரையிடப்பட்டன.   

இலங்கைத் தமிழ் திரைப்பட வரலாற்றில் புலம்பெயர் தேசத்திலே தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமொன்றுக்கு பாடல்களை வெளியீட்டு வைக்கும் முதல் நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .