2025 ஜூலை 17, வியாழக்கிழமை

செல்வி. ஜெயதீபாவின் 'நூபுர நாட்டியம்'

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பஞ்சரத்னாலயா கலைவர் மணி ஜெயசுஜிதா குகதாசனின் மாணவியும் திருஇ திருமதி சக்திவேல் தம்பதியரின் புதல்வியுமான செல்வி ஜெயதீபா சக்திவேலின் நூபுர நாட்டியம் (குச்சுப்புடி மற்றும் மோகினியாட்டம்) நேற்று சனிக்கிழமை வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக தேசநேத்ரு, கலாசூரி முனைவர் திருமதி. அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக நாட்டியக் கலைமணி திருமதி.தயானந்தி விமலசந்திரன் கலந்து சிறப்பித்தார்.  

நிகழ்வின் அணிசெய் கலைஞர்களாக நட்டுவாங்கம் – 'கலைவர்மணிகள்' திருச்சி சகோதரிகளான உஷாந்தினி மற்றும் ஜெயசுஜிதா, வாய்ப்பாட்டு - திருச்சி. செல்வி சுபலக்ஷ்மி குகதாசன், மிருதங்கம் - யாழ்ப்பாணம் ம.லோகேந்திரன், புல்லாங்குழல் - முனைவர்.கிரீஷ்குமார், பிடில் - கலாவித்தகர் திருமதி.மதுரா பாலசந்திரன், இடக்கை - கேரளா ரமேஸ்பாபு ஆகியோர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. Pix By :- Samantha Perera


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X