Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 செப்டெம்பர் 16 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.கோகிலவாணி)
'தேசிய சிறுவர் நாடக விழா 2011' கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 5 ஆம் நாளான நேற்று வியாழக்கிழமை 'புஞ்சி பாடமக்' 'நுவன்கே மிதுரோ ஹத்தெனா' ஆகிய சிங்கள நாடகங்களும், 'ரம்ப்பெல்ஸ்டிஸகின'; எனும் ஆங்கில மொழி
நாடகமும், 'குட்டியனுபவம்' எனும் தமிழ் மொழி நாடகமும் மேடையேற்றப்பட்டன.
'குட்டியனுபவம்'
சிறுவர் இலக்கிய படைப்பாளிகளில் நன்கு அறியப்பட்ட குழந்தை ம.சண்முகலிங்கத்தின் எழுத்துருவில் எம்.எம்.பரமேஸ்வரனின் இயக்கத்தில் மேடையேற்றப்பட்ட இந்நாடகமானது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவர்களைப் பற்றிய சிந்தனையை வெளிக்கொணர்வதாக அமைந்நது. ஆட்டுக் குட்டியொன்று தாயை பிரிந்தப் பின் அது எதிர்நோக்கும் பிரச்சினைகளினூடாக இச்சிந்தனை வெளிக்கொணரப்பட்டது.
இந்நாடகத்தில் யாழ்.இனுவில் அறநெறி பாடசாலை மாணவர்கள் நடித்திருந்தனர்.
'புஞ்சி பாடமக்'
சிறுமியொருத்தியின்; சுயநலத்தன்மையும் அதனை மாற்றுவதற்காக நண்பர்கள் செய்யும் தந்திரங்களும் இந்நாடகத்தின் கதைக்கருவாக அமைந்திருந்தன. ஹொரன ஜீ.ஜீ.சுஹாசன குருகுல மாணவர்கள் இந்நாடகத்தில் பாத்திரமேற்றிருந்தனர்.
'ரம்பில்ஸ்டில்ஸகின்'
அரசக் கதையை பிரதானமாக கொண்ட இந்நாடகமானது சில மாற்றங்களுடன் மேடையேற்றப்பட்டது. ஆங்கில மொழி நாடகமான இந்நாடகமானது டபள்யூ.ஜயந்த பொடி மெனிகேவின் எழுத்துருவிலும் நெறியாள்கையிலும்; மேடையேற்றப்பட்டது. இந்நாடகத்தில் இங்கிரிய ஸ்ரீ சுமனஜோதி பாலர் பாடசாலை மாணவர்கள் நடித்திருந்தனர்.
'நுவன்கே மிதுரோ ஹத்தெனா'
கிரிவுள்ள லமாஹா யோஹான் நாட்டிய பள்ளி மாணவர்கள் நடித்த இந்நாடகத்தை எல்.பீ.பீ. லொகு போத்தாகம இயக்கியிருந்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago