Kogilavani / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(க.கோகிலவாணி)
'தேசிய சிறுவர் நாடக விழா 2011' இன் 6 ஆம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை 'சந்தோசமான கழுதை' எனும் தமிழ் நாடகம், 'பொரொந்துவ' 'மம வென மலக்' ஆகிய சிங்கள மொழி நாடகங்கள மேடையேற்றப்பட்டன.
'சந்தோசமான கழுதை'
நாயின் வேலையை கழுதை செய்தால் எப்படியிருக்கும் என்பதை கதைக்கருவாகக் கொண்டு இந்நாடகம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நாடகத்தில் கம்பஹா மாவட்டத்தின்; பூகொட, குமாரிமுல்ல முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் நடித்திருந்தனர். எம்.டி.எம். ஆஸிமின் எழுத்துருவில் எம்.எம்.மொஹமட் இந்நாடகத்தை நெறியாள்கை செய்திருந்தார்.
.jpg)
.jpg)
'பொரொந்துவ'
பொரொந்துவ எனும் இந்நாடகத்தை கம்பளை அனுர மத்திய மஹா வித்தியாலய மாணவர்கள் நடித்திருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
'மம வென மலக்'
ஒரு குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகள் என இருந்தாலும் அவர்களின் எண்ணங்கள் ஒவ்வொருவருக்கிடையில் வேறுபடும். இதனை கதைக்கருவாகக் கொண்டு மம வென மலக் நாடகம் தயாரிக்கப்பட்டிருந்து.
நாலக சுவர்ண திலகவின் எழுத்துருவிலும் நெறியாள்கையின் கீழும் இந்நாடகம் மேடையேப்பட்டது. இந்நாடகத்தில் பிரபல சிங்கள தொலைக்காட்சி நடிகை மொரின் சாருனே முக்கிய வேடமேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
bzukmar Sunday, 18 September 2011 05:41 AM
சந்தோசமான கழுதை களனி மே ராசாவுக்கு பொருத்தமாக இருக்குமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .