2025 மே 01, வியாழக்கிழமை

பெண் வன்முறை தொடர்பான விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம்

Kogilavani   / 2012 ஜனவரி 05 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா,எஸ்.எம்.எம்.றம்ஸான்)

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம் சம்மாந்துரை ஹிஜ்றா சந்தி மணிக்கூட்டுக் கோபுரத்தடி மற்றும் கல்முனை நகரிலும் நடைபெற்றது.

'வன்முறைக்கு எதிரான பெண்கள் நாம் தேசிய வலையமைப்பின்' அனுசரனையுடன் பாதிப்புற்ற பெண்கள் அரங்கம், மகளிர் அபிவிருத்தி மன்றம், மறுமலர்ச்சி மன்றம், அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பு என்பன ஒன்றிணைந்து அம்பாரை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

'வன்முறைக்கு எதிரான பெண்கள் நாம் தேசிய வலையமைப்பின்' சிரேஷ்ட உறுப்பினர்களான திருமதி வாணிசைமன், காந்திமதி ஜோய், சுரோஜினி ஆகியோர் இந்நாடகத்தை நெறிப்படுத்தனர்.


You May Also Like

  Comments - 0

  • Vasakan Saturday, 07 January 2012 10:01 PM

    இதெல்லாம் தேவையல்லாத வேலை. ஒரு சிலர் பெயர் பிரபல்யம் ஆவதட்காக செய்யோம் வேலை. மனிதன் சிந்திக்க தெரிந்தவன் நீங்கள் அழகான சொல்லிக்கொண்டு அவர்களிடம் சொல்லுங்கள். சிறுவர்களுக்கும் பெண்களுக்குமான வன்முறைகள் தவிர்க்கப்பட வேனும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .