2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ சாயி கிருஷ்ணா இசைக்குழு அங்குரார்ப்பணம்

Super User   / 2012 ஜனவரி 09 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)
 
மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீசாயி கிருஷ்ணா இசைக்குழுவினர் அங்குரார்ப்பணமும் இசைக்கருவி உபகரணங்கணம் வழங்கலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.
 
வந்தாறுமூலை பிரதேசத்தின் இசைக்கலையை வளர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீசாயி கிருஷ்ணா இசைக்குழு நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணானந்தராஸாஇ தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இசைக்கருவி உபகரணங்கணங்கள் ஒரு தொகுதியினை வழங்கி வைத்தார்.
 
இந்நிகழ்வில்இ ஸ்ரீசாயி கிருஷ்ணா இசைக்குழுவின் தலைவர் செயலாளர்களாகிய சதானந்தராஜாஇ தேவப்பிரதீபன் ஆகியோர் தேச பக்தி பாடலொன்றினை இசைத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .