Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 11 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரமன்)
அறுபதுகளில் இலங்கையின் பிரபல மெல்லிசை மற்றும் பொப்பிசைப் பாடகரும் இலங்கை வானொலிபுகழ் இசைக்கலைஞருமான திருகோணமலையின் சிரேஷ்ட இசைக்கலைஞர் என்.இம்மானுவேலின் மாணவர்கள் வழங்கிய 'வானம்பாடிகள்' இசை நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்த கல்லூரி அரங்கில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
தமது மாணவர்களை கொண்டு என்.இம்மானுவேல் கடந்த 25 ஆண்டுகளாக இசை நிகழ்வுகளை திருகோணமலையில் நடத்தி வருகின்றார்.
இலங்கையின் முதல் தமிழ் மெல்லிசை இசைத்தட்டை வெளியிட்ட பழம்பெரும் இசைக்கலைஞரான என்.இம்மானுவேல் 1960 களின் ஆரம்பத்தில் இலங்கையில் மெல்லிசை மற்றும் பொப்பிசை கலைஞராக விளங்கிய அதேவேளை கொழும்பின் றொக்சாமி, மட்டக்களப்பின் பேடிலோபஸ், திருகோணமலையின் பத்மநாதன் ஆகிய மூத்த இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசை உலகில் சிறப்பிடம் பெற்றிருந்தார்.
தமது முதிர் வயதிலும் இளம் சமுகத்தின் மத்தியில் இசைக்கலைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற அவாவினால் சிறுவர்களை இத்துறையில் மிக நீண்டகாலமாக இவர் பயிற்றுவித்து வருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
01 May 2025