2025 மே 01, வியாழக்கிழமை

நடன, நாட்டிய, நாடகப் போட்டிகளுக்கு விண்ணப்பம் கோரல்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 23 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை கலைக்கழகத்தின் அரச நடன நாட்டியநாடகக்குழு ஆகியன ஒன்றிணைந்து வருடம்தோறும் நடத்தும் 2012ஆம் ஆண்டுக்குரிய அரச நடனப்போட்டி மற்றும் நாட்டிய நாடகப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
 
அரச நடனப் போட்டிகள், தேசிய நடனப்போட்டி, கலைக்குழுக்களுக்கிடையிலான தேசிய நடனப்போட்டி என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன. கலாசாரத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட கலைக்குழுக்கள், கலாசார மத்திய நிலையங்கள், மற்றும் பாடசாலைகள் நாட்டியக் குழுக்கள் தேசிய நடனப்போட்டியிலும், 

கலாசாரத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட கலைக்குழுக்கள், கலைக்குழுக்களுக்கு இடையிலான தேசிய நடனப் போட்டியிலும் பங்குபற்ற முடியும் என்று கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் விஜித கணுகல அறிவித்துள்ளார்.

மாவட்டம், மாகாணம், தேசியம் என மூன்று மட்டங்களில் இந்தப்போட்டிகள் நடைபெறும். தேசியமட்டத்திலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப்பெறுபவர்களுக்கு சான்றிதழுடன் பணப்பரிசிலும், விருதும் வழங்கப்படவுள்ளன.

சிறுவர் பிரிவு (08 வயது முதல் 12 வயது வரை), கனிஸ்டபிரிவு (13 வயது முதல் 18 வயது வரை, சிரேஸ்ட பிரிவு (19 வயது முதல் 29 வயது வரை), திறந்த வெளிப்போட்டி (29 வயதிற்கு மேற்பட்டோர்) கிராமிய நடனம் (12 வயதிற்கு மேற்பட்டோர்) கிராமிய நடனம் (29 வயதிற்கு மேற்பட்டோர்) இந்திய நடனத்தை ஒட்டிய புதிய நிர்மாணங்கள் (19 வயது முதல் 29 வயது வரை) ன்ற அடிப்படையில் போட்டிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

நாட்டிய நாடகப்போட்டிகள் சிறுவர் நாட்டியநாடகம், வளர்ந்தோருக்கான நாட்டிய நாடகம் (15 முதல் 20 நிமிடங்களுக்கு இடைப்பட்டது) வளர்ந்தோருக்கான நாட்டிய நாடகம் (40 முதல் 60 நிமிடங்களுக்கு உட்பட்டது) என மூன்று பிரிவுகளாக நடத்தப்படும்.

இதேவேளை, வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட நாட்டிய மன்றங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு மேற்படி போட்டிக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் தபால்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதிக்கு பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் வவுனியா பிரதேச செயலாளர் அ.சிவபாலசுந்தரன் அறிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .