2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கும்பாபிஷேக மலர் வெளியீடு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


மட்டக்களப்பு, ஒந்தாச்சிமடம் ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய பரிபாலனசபையின் கும்பாபிஷேக மலர் வெளியீட்டு விழா இன்று செவ்வாய்க்கிழமை ஒந்தாச்சிமடம் முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

தேசபந்து முத்துப்பிள்ளை விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கே.தட்சணாமூர்த்தி, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிறேம்குமார், மாவட்ட வர்த்தக
கைத்தொழில் விவசாய சம்மேளன தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மலர் பற்றிய கண்ணோட்ட உரையை கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.எஸ்.கேசவன் ஆற்றினார். ஆசி உரையை இராமகிருஷ்ணமிஷன் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் சுவாமி ஹபாலிசானந்தாஜீ ஆற்றினார்.  தலைமை உரையை தேசபந்து முத்துப்பிள்ளை விஸ்வநாதன் ஆற்றினார். 

இந்த மலரின் நூலாசிரியர் ஊடகவியலாளரும் சமூக சேவையாளரும் கார்மேல் பாத்திமா கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவருமான சமாதான நீதவான் பாண்டிருப்பு ஒந்தாச்சிமடம் சிவம் பாக்கியநாதன் ஆவார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .