2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'சுணைக்காடு' நாடக நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்,கே.பிரசாத்)

யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகின்ற அரங்க நிறுவனமான 'செயற்றிறன்'  நிறுவனம் மற்றும் கொழும்பில் இயங்கி வருகின்ற ஜேர்மன் கலாசார நிறுவனமுமான 'கோத்' நிறுவனமும் இணைந்து தயாரித்து வழங்கிய 'சுனைக்காடு' நாடகம் நேற்று முன்தினம் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலை அரங்கில் மேடையேற்றப்பட்டது.

ஜேர்மனிய நாடக ஆசிரியர் லூட்ஸ் ஹப்னா எழுதிய 'கிரிப்ஸ்' என்ற இளையோருக்கான மேற்படி நாடகம் 'சுனைக்காடு' என்ற பெயரில் தமிழில் மேடையேற்றப்பட்டுள்ளது.

ஜேர்மனிய மொழியில் தயாரிக்கப்பட்ட இந்நாடகம்  கடந்த 2003 ஆம் ஆண்டு வென் ஜியொட்டின் காடலல் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.  இதனை கலாநிதி குழந்தை ம.சன்முகலிங்கம் தமிழில் மொழிபெயர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தே.தேவானந்தாவின் நெறியாழ்கையில் மேடையேற்றம் செய்யப்பட்ட மேற்படி நாடகத்தினை பலர் கண்டுகளித்தனர். 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .