2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வலி.தெற்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் கலாசார விழா

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 06 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

வலிகாமம் தெற்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் நடத்தப்படும் கலாசார விழா நாளைமறுதினம் சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு இணுவில் கந்தசுவாமி கோவில் இளம் தொண்டர் சபை மண்டபத்தில் பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான மு.நந்தகோபாலன் தலைமையில் நடைபெறவுள்ளது.

பகல் நிகழ்வுக்கான பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை  அமைச்சின்  செயலாளர் சி.சத்தியசீலனும் சிறப்பு விருந்தினர்களாக  யாழ். பல்கலைக்கழக கணித புள்ளிவிபரத்துறை பேராசிரியர் ஆக்.விக்கினேஸ்வரன், வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் என்.ஸ்ரீதேவி, யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஈ.குமரனும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

காலை நிகழ்வில் மங்கள் இசையை இணுவில் சுந்தரமூர்த்தி குழுவினரும் தமிழ் தாய் வாழ்த்தை கலாபூஷணம் ஞானகுமார் சிவனேசன் பாடவுள்ளார்.

உடுவில் நிருத்திய நிகேதா நாட்டியாலயத்தின் நடனமும் ஏழாலை அபிநயா நிலையத்தின் கிராமிய நடனமும்; சதேசிய கலாமன்றம் வழங்கும் 'அன்னை நிலம்'  நாடகமும் நடைபெறவுள்ளன.

2002ஆம் ஆண்டு தேசிய கலை இலக்கியப் போட்டியில் பிரதேச மாவட்ட  மட்டத்தில்  வெற்றி பெற்றவர்களுக்கும்  தேசிய மட்டத்தில் நடைபெற்ற சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

பிற்பகல் நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம விருந்தினராகவும்  சிறப்பு விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் பீடாதிபதி க.தேவராசா,  பனை அபிவிருத்திச்சபைத் தலைவர் ப.சீவரத்தினம், யாழ். பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்  கலைவாணி இராமநாதனும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

மங்கள இசையை இணுவில் கோவிந்தசாமி குழுவினரும் ஏழாலை அபிநயகுழுவினரின் வரவேற்பு மற்றும் கீர்தன நடனமும் இசை நடன சங்கம நிகழ்வும் கலைஞர்களை கௌரவித்தலும்  இணுவில் இளம் தொண்டர் சபையின் 'வள்ளி திருமணம்' நாடகமும் நடைபெறும்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .