2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

தமிழியல் விருது வழங்கும் விழா

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 20 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 2011ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருது வழங்கும் விழா எதிர்வரும் 23ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் வண.பிதா சிறிதரன் சில்வெஸ்டர் அரங்கில் நடைபெறவுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் செ.யோகராசா தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம விருந்தினராக இருதயநோய் வைத்திய ஆலோசகர் வைத்தியக் கலாநிதி கனகசிங்கம் அருள்நிதி கலந்துகொள்கிறார். கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் கலந்துகொள்கிறார். விசேட அதிதியாக லண்டன நிதிப்பணிப்பாளரும் எழுத்தாளருமாகிய வவுனியூர் இரா.உதயணனும் சிறப்பு அதிதியாக மூத்த ஊடகவியலாளர் இனிய வி.தேவராஜ்ஜும் அழைப்பு அதிதியாக கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத் தலைவர் பொன்.செல்வநாயகமும் கலந்துகொள்கின்றனர்.

இவ்விழாவில் எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதனின் உயர் தமிழியல் விருது பேராசிரியர் சி.மௌனகுருவுக்கு வழங்கப்படவுள்ளது. தலா 15,000 பொற்கிழியுடன் வவுனியூர் ஸ்ரீஇராமகிருஸ்ணா - கமலநாயகி தமிழியல் விருது சிவசெறிப்புரவலர் சீ.ஏ.இராமஸ்வாமி, கலாநிதி முல்லைமணி, சிற்பி.சி.சரவணபவன், பத்மா சோமகாந்தன், அன்னலெட்சுமி இராசதுரை ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, 2010ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்களுக்கான தலா 10,000 ரூபா பொற்கிழியுடனான தமிழியல் விருதும்  நூல்களுக்கு வழங்கப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X