2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நிருத்திய நிகேதன கல்லூரியின் ஆண்டுவிழா

Kogilavani   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியின் 18 ஆவது ஆண்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகர கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

கலாநிதி கந்தையா ஸ்ரீ கணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், வவுனியா பிரதேச செயலலாளர் அ.சிவபாலசுந்தரன்,  வவுனியா தெற்கு கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி த.அன்ரன் சோமராஜா, தெற்கு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் க.கந்தையா, கௌரவ விருந்தினர்களாக மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர் தி.தர்மலிங்கம், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிகழ்ச்சி அபிவிருத்தி அதிகாரி யே.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்ய பலரும் கௌரவிக்கப்பட்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .