2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மட்டக்களப்பில் ஆய்வரங்கு நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு இசை, நடனக் கல்லூரியில்; எதிர்வரும் 13ஆம் 14ஆம் 15ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை மாபெரும் ஆய்வரங்கு கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவையொட்டி நடைபெறவுள்ளது. அத்துடன் கலை நிகழ்வு, நாட்டிய நாடகம், ஓவியக் கண்காட்சியும்  நடைபெறவுள்ளன.

இது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் மட்டக்களப்பு, கல்லடி இந்து கலாசார மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்;ட செயலகத்தின் பண்பாட்;டு பிரிவு இந்நிகழ்வை ஏற்பாடுசெய்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட சமூகங்களும் பண்பாடுகளும் பண்பாடுகளின் உருவாக்கங்களும் - பேசாப்பொருளும் பல்வகைமைகளும் என்ற தலைப்பில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மறைந்துசெல்லும் பாரம்பரிய கலைகளை மிளிரச்செய்வதற்கும் எம்மத்தியில் பேசப்படாமலுள்ள கலைகளை பேசச்செய்வதற்கும் இதன் மூலம் சிறந்த களம் ஏற்படுத்திக்கொடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாண பண்பாட்டு கலாசார விழாவின் பிரதான நிகழ்வு திருகோணமலையிலும் இதுபோன்ற ஆய்வரங்கு பண்பாட்டு விழா நிகழ்வொன்று அம்பாறையிலும் நடைபெறவுள்ளது. வழமையாக மாகாணத்தின் ஒரு மாவட்டத்தில் மாத்திரம் இவ்விழா நடைபெறுவது வழமை இம்முறை மூன்று மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜி.டபிள்யூ.வெலிகல, கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீட தலைவர் கலாநிதி சி.ஜெய்சங்கர், விரிவுரையாளர்கள், கலைஞர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .