2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

திருக்கோவில் பிரதேச சாஹித்திய விழாவும் 'விளைநிலம்' மலர் வெளியீட்டு விழாவும்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

திருக்கோவில் பிரதேச செயலகம் பொதுமக்களும் இணைந்து நடாத்தும் திருக்கோவில் பிரதேச சாஹித்திய விழாவும் 'விளைநிலம்' மலர் வெளியீட்டு விழாவும் நேற்று வெள்ளிக்கிழமை தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் கலாசார பேரவையின் தலைவரும் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கே.முருகானந்தம், திருக்கோவில் வலயக்கல்வி ஆர்.சுகிர்தராஜன், கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் எஸ்.திலகராஜா, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், முன்னாள் உதவி அரசாங்க அதிபர் சி.ரி.சச்சிதானந்தம், முன்னாள் பிரதேச செயலாளர் பே.இராஜசெல்வகுமார், லெப்டினன் கேணல் கீர்த்திசோம, நீர்ப்பாசன திணைக்கள பொறியலார் ஜி.சுஜிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட அதிதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூகசேவர்கள் 22பேரை பாராட்டி, பொன்னாடை போர்த்தி நினைவுக்கேடயம் வழங்கி கௌரவித்ததுடன், 'விளைநிலம்' மலர் வெளியீடும் இடம்பெற்றது.

இதேவேளை, இவ் கலாசார விழா கடந்த 30 வருடங்களின் பின்னர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .