2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கொழும்பில் பெத்தம்மா திரைப்பட, சவால் பாடல் வெளியீடும்

Super User   / 2014 ஜனவரி 29 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெத்தம்மா திரைப்படம் மற்றும் சவால் பாடல் ஆகியவற்றின் வெளியீடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பிலுள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் துருவம் ஊடக வலையமைப்பினால் வெளியிடப்படவுள்ளது.

உலகத் தமிழ் அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள திரைப்படத்துறை சார்ந்த கலைஞர்கள், அரசியல்வாதிகள், ஊடகத்துறை சார்ந்தவர்கள் மற்றும் புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொள்ளனர்.

இந்நிகழ்வில் முன்னிலை அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரியிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீனும் பிரதம அதிதியாக முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவும் கெளரவ அதிதிகளாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி, முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், கல்முனை பிரதி மேயர் ஸிராஸ் மீராசாஹிப் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் பெத்தம்மா திரைப்படம் பற்றிய அறிகமுவுரையை அதன் நடிகர் எம்.ஏ.சி. சர்மில் நிகழ்த்துவார். அபோன்று சவால் திரைப்படம் பற்றிய அறிமுகவுவரையை அதன் இயக்குநரும் துருவம் ஊடக வலையமைப்பின் தலைவருமான பிறவஸ் நிகழ்த்துவார்.

பெத்தம்மா திரைப்படத்தின் முதற் பிரதியை ஒலிபரப்பாளரும் மானுட நேயனுமான இர்ஷாத் ஏ. காதரும் சவால் பாடலின் முதற் பிரதியை றோயல் பெயின்ட் நிறுவனத்தின் ஆலோசகர் ஷான் முஹம்மட் பெற்றுக்கொள்வார். அத்துடன் பாடகர்களான முஹம்மட் இர்பான், சமீரா ஹஸன், ப்னாஸ், ஜெரால்ட், சின்மயி, ஷிப்னான் ஆகியோர் பாடல்களும் இடம்பெறும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .