2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

யாழில் நடைபெற்ற இயற்கை ஆடுகளம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 15 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


யாழ்.இந்தியத் துணைத் தூதரகமும் திருமறைக் கலாமன்றமும் இணைந்து நடத்திய 'இயற்கை ஆடுகளம்' என்னும் நடன அளிக்கைகள் வெள்ளிக்கிழமை (14) மாலை யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையரங்கில் நடைபெற்றது.

இக்கலை நிகழ்வில் நட்டுவாங்கத்தினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஓய்வுநிலை விரிவுரையாளர் கலாகீர்த்தி ஸ்ரீமதி சாந்தினி சிவநேசன், யாழ்ப்பாண கல்வி வலய ஓய்வுபெற்ற நடன ஆசிரிய ஆலோசகர் திருமதி பத்மினி, யாழ்.கலைத்தூது அழகியல் கல்லூரி நடன ஆசிரியர் திருமதி சுதர்சினி ஹரன்சன் ஆகியோர் வழங்கினர்.

அத்துடன், குரலிசையினை சங்கீத கலாவித்தகர் ம.தயாபரன், செல்வி சிவராஜா சிவதாஷினி ஆகியோரும், மிருதங்கம் இசைமாணி சி.துரைராஜாவும், வயலின் கலைஞானகேசரி அம்பலவானர் ஜெயராமனும், கீபோர்ட் இசைத்தென்றல் ம.ஜேசுதாசனும் ஆகியோர் வழங்கினார்கள்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .