2025 மே 16, வெள்ளிக்கிழமை

கவிதை இயற்றல் தொடர்பான பயிற்சிப் பட்டறை

Kogilavani   / 2014 மார்ச் 12 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


தமிழ் மாணவர்களிடையே கலையை வளர்ப்பதற்காக கிறுக்கல் சித்திரத்தில் உருவம் எடுத்;து கவிதை இயற்றல் தொடர்பான பயிற்சிப் பட்டறை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்கிழமை (11) பிரதேச கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா-வில்வரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது.

இதில் மாணவர்கள் எவ்வாறு கிறுக்கல் சித்திரத்தில் உருவம் எடுத்து கவிதை வரைதல் என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்களும் வழங்கப்பட்டன.

மட்.அரசடித்தீவு விக்கினேஸ்வரா வித்தியாலயம், மட்.அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி  வளர்மதிராஜ், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் த.மேகலா, மு.ஜெயந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப் பயிற்சி பட்டறையானது எதிர்வரும் 13ஆம் திகதி இப்பிரதேசத்தில் அமைந்துள்ள மட்.மவடிமுன்மாரி பாடசாலையில் மாவடிமுன்மாரி, நாற்பதுவட்டை, கொல்லனுலை, ஆகிய பாடசாலை மாணவர்களுக்கும், 14 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் முதலைக்குடா, முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, ஆகிய பாடசாலை மாணவர்களும் இடம்பெறவுள்ளதாக பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி.வளர்மதி ராஜ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .