2025 நவம்பர் 22, சனிக்கிழமை

வலது குறைந்தவர்களுக்கான விழிப்புணர்வு வீதி நாடகம்

Kogilavani   / 2014 ஜூன் 25 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்சக்திவேல், எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக முன்றலில்  செவ்வாய்க்கிழமை (24)  ஏண்டிக்கப் (HANDICAP) சர்வதேச நிறுவனத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு வீதிநாடகம்  புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழக  நாடகக் குழுவினரால் நடாத்தப்பட்டது.

சமூகத்தில் மற்றுத்திறனாளிகளை உள்வாங்கி அவர்களையும் சமூகத்துடன் இணைத்து அவர்களது உணர்வுகள் தேவைகளை அறிந்து  சகோதரத்துவத்துடன் வாழ்வது தொடர்ப்பான விழிப்புணர்வு வீதிநாடகமாக அமைந்திருந்தது.
 
இந்நிகழ்வில் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும்  பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை,  'மாற்றுத்திறனாளிகள் சமுகத்தில் ஒருவர்' எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு வீதிநாடகம் புதன்கிழமை(25) கோறளைப்பற்று பிரதேச செலகப் பிரிவில் இடம்பெற்றது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X