2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கான அரச கலை விழா

Kogilavani   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கலாசார அலுவல்கள் திணைக்களம் மாற்றுத்திறனாளிகளுக்கான அரச கலை விழாவை இம்மாதம் நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் விஜித் கணுகல வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், மாற்றுவலுவுள்ளோர் தொடர்பாக நடத்தப்படும் முதலாவது அரச கலைவிழாவாக இது அமையவுள்ளது.

18 வயதுக்கு குறைந்தோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் என வகைப்படுத்தி போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 

நடனப் போட்டிகளில், சுதேச நடனம், இந்திய நடனம், புத்தாக்க நடனம், நாட்டார் நடனங்கள் ஆகியவையும் இசைக்கருவிகளில் வயலின், சித்தார், புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகள் இசைத்தல் போட்டிகளும் பாடல்களுக்கான போட்டிகளில் மெல்லிசைப் பாடல், நாட்டார் பாடல், கர்நாடக சங்கீதப் பாடல் என்பனவும், பறை சாற்றுதலுக்கான போட்டிகளில் சுதேசிய பறை சாற்றுதல், இந்திய பறை சாற்றுதல் ஆகிய போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

அத்துடன், ஓவிய போட்டி, குறுநடனப் போட்டி, நாட்டிய நடனப் போட்டி, அபிநய நடனப் போட்டி ஆகியனவும் இடம்பெறவுள்ளன.

இது தொடர்பான சுற்றுநிரூபம் நாடு முழுவதுமுள்ள மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

போட்டி தொடர்பான மேலதிக விபரங்களை பிரதேச செயலகப் பிரிவுகளில் கடமையாற்றும் கலாசார அபிவிருத்தி உதவியாளர்களிடம் பெறமுடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .