2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

ஆற்றல் நிகழ்வில் வெற்றீட்டியவர்களுக்கு பாராட்டு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,க.ருத்திரன்


உயர் கல்வி அமைச்சால் வருடாந்தம் நடத்தப்படும் ஆற்றல் நிகழ்வில் வெற்றியீட்டி கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை பல்கலைகழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்;ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா கலந்துகொண்டார்.

இதில் கலை, கலாசாரபீட பீடாதிபதி கலாநிதி க.இராஜேந்திரம், சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி க.பிரேமகுமார், விவசாயபீட பீடாதிபதி கலாநிதி பொ.சிவராஜா, விஞ்ஞானபீட பீடாதிபதி கலாநிதி பி.சா.ராகல், வர்த்தக முகாமைத்துவபீட பீடாதிபதி ந.லோகேஸ்வரன், சௌக்கிய பராமரிப்புபீட பீடாதிபதி கலாநிதி த.சுந்தரேசன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் நடனம், பாடல் ஆகியன நடைபெற்றதுடன்  ஆற்றல் நிகழ்வில் ஓவியம், அறிவிப்பாளர், நகைச்சுவைப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து இம்முறை (2014) 150 போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன், 65 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டிகளிலும் வெற்றியீட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .