2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மைதிலியின் நூல் வெளியீட்டு விழா

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மைதிலி தயாபரனின் 'வாழும் காலம் யாவிலும்', 'சொந்தங்களை வாழ்த்தி' நூல் வெளியீட்டு விழா கலாநிதி தமிழ்மணி அகலங்கன் தலைமையில் நாளை ஞாயிற்றுக்கிழமை (21) வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வின், வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி; திருமதி க.சிவபாதசுந்தரம் பிரதம விருந்தினராகவும்; வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம், வடக்கின் வசந்தம் திட்டப்பணிப்பாளர் பிரியந்த குணதிலக, வைத்தியகலாநிதி, வடமாகாணசபை உறுப்பினர்களான சிவமோகன், மயில்வாகனம் தியாகராஜா, வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராஜா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் மற்றும் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளர் என். கமலதாசன், மக்கள் சேவை மாமணி நா. சேனாதிராஜா, சிவத்திரு ஆ. நவரத்தினராசா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன் சட்டத்தரணிகளான அன்ரன் புனிதநாயகம், ரி. கங்காதரன் ஆகியோரும் பிரதேச மின் பொறியியலாளர் செ. பிரபாகரன் வவுனியா மின்சாரசபை திட்டமுகாமையாளர் த.குணசீலன், நீர்ப்பாசனதிணைக்கள பிரதிப்பணிப்பாளர் ந. ஸ்ரீஸ்கந்தராஜா, நகரசபை செயலாளர் க.சத்தியசீலன், சுகாதாரவைத்திய அதிகாரி எம் .மகேந்திரன், வலயக்கல்வி பணிப்பாளர் அன்ரன் சோமராஜா, மற்றும் பிரதி வலயக்கல்விப் பணிப்பாளர் நா. மாணிக்கவாசகம், வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு இந்துமாமன்ற தலைவர் வை.சோ தேவராசா, சைவசிரோமணி க.ந. பாலச்சந்திரன் முன்னாள் நகர பிதா எஸ்.என்.ஜீ. நாதன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் ஆகியோரும சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X