2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பொகவந்தலாவை கலைஞர்கள் மட்டக்களப்பு விஜயம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


பொகவந்தலாவையைச் சேர்ந்த கலைஞர்கள் பலர் (காமன் கூத்தில் பங்கேற்கும் கலைஞர்கள்) மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை(12) விஜயம்செய்தனர்.

பேராசிரியர் எஸ்.மௌனகுருவினால் நடத்தப்படும் ஆய்வு கூடத்திலுள்ள நூலகம், கலைக்கூடம் மற்றும் புராதன இசைக் கருவிகள் என்பவற்றைப் இவர்கள் பார்வையிட்டனர்.

இவர்கள், மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடத்தில் இசை நிகழ்வுகளை நடத்தினர். பேராசிரியர் மௌனகுரு கலைஞர்களுக்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள தேடல்கள் பற்றி விளக்கமளித்ததோடு புத்தகங்களை வழங்கி கலைஞர்களை கௌரவித்தார்.

நாவற்குடாவில் நடைபெற்ற பாரம்பரிய கலைகளின் சங்கமத்தில் மலையகத்தில் பிரதான கூத்துக்கலையாக கருதப்படும் காமன் கூத்தும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X