2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மீன்பாடும் மெல்லிசை கானங்கள்

Gavitha   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்
,ஜ.நேகா

மீன்பாடும் மெல்லிசை கானங்கள் இறுவெட்டு வெளியீட்டு விழா, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் சனிக்கிழமை (18) இடம்பெற்றது.

மட்டக்களப்பின் பாரம்பரியங்கள், இயற்கை அழகுடன் கூடிய இடங்களின் பெருமைகள், கலை கலாசார விழுமியங்கள் அனைத்தும் பாடல் வரிகளாக எழுதப்பட்டு, ஜீவம் சகோதரர்களாலும் அவர்களது வழித்தேன்றல்களாலும் பாடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பின் மெல்லிசை முன்னோடிகளால் இயற்றி இசையமைக்கப்பட்ட இவ்விறுவெட்டு, மண்முனை வடக்கு கலாசாரப் பேரவையின் தலைவரும் பிரதேச செயலாளருமான வெ. தவராஜாவின் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான இந்திரகுமார் பிரசன்னா, கருணாகரன் ஜனா, மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ. விமலநாதன், பேராசிரியர் எஸ். மௌனகுரு, மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் பிரதேச செயலாளர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X