2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'உறவுகளுடன் கைகோர்ப்போம்'

Thipaan   / 2014 ஒக்டோபர் 23 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்   


மட்டக்களப்பு, பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில், தீபாவளியை முன்னிட்டு, 'உறவுகளுடன் கைகோர்ப்போம்' எனும் சிறப்பு நிகழ்வு, முனைக்காடு நாகலிங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நேற்று புதன்கிழமை (22) நடைபெற்றது.

இதன் போது மாதா, பிதா, குரு, தெய்வம் போன்ற தலைப்பிலான சிறப்பு  கவியரங்கம், வசந்தன்கூத்து, போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் த.மேகராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,

மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், நாகலிங்கேஸ்வரர் ஆலய பிரதமகுரு ப.மானாகப்போடி, கலாபூசணம் க.பொன்னம்பலம், மத்தளவித்தகன் எஸ்.கதிராமநாதன், மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆலயத் தலைவர்கள்  பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X