2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

'உலகெலாம்' நூல் வெளியீட்டு விழா

Thipaan   / 2014 ஒக்டோபர் 25 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு ராகுல் நாயுடு எழுதிய சமயம் கடந்த உண்மையை இயம்பும் 'உலகெலாம்' நூல் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (26) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

செங்கதிர் இலக்கிய வட்டத் தலைவர் க. தங்கேஸ்வரி தலைமையில் நடைபெறும் நிகழ்வில் ஆசியுரைகளை இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய குருமார் நிகழ்த்துவர்.

முதன்மை விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி;. துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண கலாசார திணைக்களப் பணிப்பாளர் டபிள்யு. ஏ.எல். விக்கிரம ஆராய்ச்சி, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி த. சிவநாதன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதியின் இணைப்பாளரும் மட்டக்களப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளருமான அருண் தம்பிமுத்து விசேட விருந்தினராக  கலந்து கொண்டு முதல் பிரதியைப் பெற்று நூலை வெளியிட்டு வைக்கவுள்ளார்.

நூல் நயவுரையை கிழக்கு பல்கலைக் கழக மொழித்துறைத் தலைவர் றூபி வலன்ரினா பிரான்சிஸ் நிகழ்த்தவுள்ளார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X