2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

சாதனையாளர் பாராட்டு விழா

Sudharshini   / 2014 நவம்பர் 17 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஷ்வரா மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழாவும், தீவொளி சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் வித்தியாலய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் க.தியாகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாதனையாளர்களை பாராட்டி, கௌரவித்து, சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசில்கள் என்பன வழங்கப்பட்டன.

பாடசாலை வரலாற்றில் முதலாவது தடவையாக இச்சாதனையாளர் பாராட்டு விழாவும் தீவொளி சஞ்சிகையும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தீவொளி சஞ்சிகையில் சாதனையாளர்களின் விவரங்கள், பாடசாலை வரலாறு, ஆசிரியர்கள், மாணவர்களது ஆக்கங்கள் அடங்கிய பொக்கிசமாக இச்சஞ்சிகை அமையப்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், கொக்கட்டிச்சோலை தான்;தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு, மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள்,உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X