2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

விஞ்சிடுமோ விஞ்ஞானம் கவிதை தொகுப்பு வெளியீடு

Sudharshini   / 2015 ஜனவரி 14 , பி.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி, மைதிலி தயாபரனின் 'விஞ்சிடுமோ விஞ்ஞானம்' கவிதை தொகுப்பு வெளியீடு, எதிர்வரும் 20ஆம் திகதி இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

தமிழறிஞர் கலாநிதி அகளங்கன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், பாடசாலை அதிபர்;அருட்சகோதரி திரேசம்மா சில்வா, பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர் செல்வி மேரி அன்ரோனியா ஸ்ரெனிஸ்லா உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
இந்நிகழ்வில், பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் திருமதி சுகந்தி கிசோர் வரவேற்புரையையும் சிரேஷ்ட ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை வாழ்த்துரையையும் வழங்கவுள்ளனர்.

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் செயலாளரும் யாழ். பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான கந்தையா ஸ்ரீகணேசன் வெளியீட்டு உரையை நிகழ்த்தவுள்ளார்.

ஆய்வு உரையை பண்டிதர் மானியூர் வி.பிரதீபனும் நயப்புரையை கவிஞர் சமரபாகு சீனா உதயகுமாரும் வித்தியாரத்தினா சு.வரதராஜன், கவிஞர் த.நிறைமதி  ஆகியோரும்  வழங்கவுள்ளனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X