Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜனவரி 26 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மகுடம் கலை இலக்கிய வட்டம் மாதாந்தம் நடாத்திவரும் யாவரும் பேசலாம் பௌர்ணமி நிகழ்வின் எட்டாவது தொடராக 'இலங்கையின் நவீனத்துவமும் கலை வெளிப்பாடும்'என்னும் தலைப்பிலான கருத்தாடல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (25) கலாநிதி சி.சந்திரசேகரம் தலைமையில் மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் க.சிவரெத்தினம் சிறப்புரை நிகழ்த்தினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலைமறைகாயாகவுள்ள இலக்கியவாதிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் வெளிக்கொணரும் வகையில் மாதாந்தம் இந்நிகழ்வு நடத்தப்பட்டுவருகின்றது.
வரவேற்புரையினை மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் வீ.மைக்கல் கொலின் நிகழ்த்தியதுடன் முன்னிலை வகிப்பாளராக பேராசிரியர் சி.மௌனகுரு கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago