Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 ஜனவரி 27 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவலாசிரியரும், கவிஞருமான நீ.பி.அருளானந்தத்தின் 'இந்த வனத்துக்குள்' என்ற நாவலும் 'மௌனமான இரவில் விழும்பழம்' என்ற கவிதை தொகுதியும் ஆகியவற்றின் வெளியீட்டு விழா கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்க பொருளாளர் புரவலர் வி.றஞ்சித மூர்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது.
இந்நிகழ்வில், தமிழ் வாழ்த்தை திருமதி வரதா யோகநாதனும் வரவேற்புரையை கொழும்பு தமிழ்ச் சங்க இலக்கியக் குழு செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நிகழ்த்தினர்.
முதன்மை விருந்தினராக அருட்கலைவாரிதி கலாபூஷணம் சு.சண்முக வடிவேல் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மூத்த ஒளி, ஒலிப்பரப்பாளர் செல்வி சற்சொரூபவதி நாதன், எழுத்தாளர் வேல் அமுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த வனத்துக்குள் என்ற நாவலின் அறிமுகவுரையை சாகித்தியரத்தினம் தெளிவத்தை ஜோசப் நிகழ்த்தினார். மௌனமான இரவில் விழும்பழம் என்ற கவிதை நூலின் அறிமுகவுரையை திருமதி வசந்தி தயாபரன் நிகழ்த்தினார்.
இந்த வனத்துக்குள் என்ற நாவலின் முதற்பிரதியை வைத்தியகலாநிதி சிவப்பிரகாசம் அனுசாந்தன் பெற்றுக்கொண்டார்.
மௌனமான இரவில் விழும்பழம் என்ற கவிதை நூலின் முதற்பிரதியை கொழும்புத் தமிழ்ச் சங்க பொதுச்; செயலாளர் தம்பு சிவசுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார். நாவல் நயவுரையை பேராசிரியர் வ.மகேஸ்வரன் நிகழ்த்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
28 minute ago
41 minute ago