2025 நவம்பர் 05, புதன்கிழமை

சிலை திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சமூக சேவையாளரும் பிரபல கட்டடக் கலைஞருமாகிய அமரர் சி.இரத்தினத்தின் திருவுருவச் சிலை திறப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை (22) பிற்பகல் 4 மணிக்கு கைதடி நவபுரத்தில் நடைபெற்றது.

சங்கரன் தங்கராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சிலையை திறந்து வைத்தார்.

கட்டடக் கலைஞர் கா.வைரவநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான வே.சிவயோகன் மற்றும் அ.பரம்சோதி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X