Kogilavani / 2015 மார்ச் 02 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
'நவீன நாகரீகத்தின் தோற்றப்பாடுகளால் கலை, கலாசார விழிமியங்கள் எம்மிடத்திலிருந்து மறைந்து செல்லும் அபாய நிலை தோன்றி வருகின்றது. அதனை மேம்படுத்தும் முகமாக காலாசார அமைச்சினால் நாடு முழுவதும் 173 கலாசார மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் 7ஆவது காலாசார மத்திய நிலையமாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது' என கலாசார அமைச்சின் மேலதிக செயலாளர் தீபா சேரசிங்க தெரிவித்தார்.
'கலைகள் மூலம் சமூகததுக்கு பல விடயங்களை புடம் போட்டுக்காட்ட முடிகின்றன. கலையுணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதொரு அம்சமாகவே உள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.
திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை(01) திறந்துவைத்து உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'மனிதர்களிடையே வேறுபாடுகள் கிடையாது. அவ்வாறு பிரித்துப் பார்க்கவும் முடியாது. அவர்களது இரத்தம், குணாம்சங்கள், வாழ்வியல் முறைகள் அனைத்தும் ஒன்றுபட்டதாகவே காணப்படுகின்றன. அவ்வாறுதான் கலையையும் இன, மத, சமூக ரீதியாக பிரித்துப்பார்க்க முடியாது.
கலைகளும், கலையியல் கோட்பாடுகளும் மனிதனை நல்வழிப்படுத்துவதாகவே நான் கான்கின்றேன்.
ரூபா 12.5 மில்லியன் நிதியொதுக்கீட்டில் இம்மண்டபம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு;ள்ளதுடன் இந்நிலையத்தில் நான்கு பேருக்கான தொழில் வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
எனவே இதனை பிரதேச மக்கள் முறையாகப் பயன்படுத்தி இலை,மறை காயாகவுள்ள திறமைமிக்கவர்களை வெளிக்கொண்டுவர முயற்சிக்க வேண்டும்' என்றார்.
33 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago