2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

இயற்பியல் நூல் வெளியீடு

Menaka Mookandi   / 2015 மார்ச் 12 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலிகாமம் கல்வி வலய விஞ்ஞானபாட ஆசிரிய ஆலோசகர் நா.ஸ்ரீகணசனால் எழுதப்பட்ட தரம் 10, 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான இயற்பியல் (பௌதிகவியல்) நூல் வெளியீடு, மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி கமலராணி கிருஸ்ணபிள்ளை தலைமையில் புதன்கிழமை (11) நடைபெற்றது.

ஒய்வுநிலை அதிபர் கு.ஜெகநாதன் நூலினை வெளியிட்டு வைக்க முதற் பிரதியை திருமதி புஸ்பவதி சிவகுமார் பெற்றுக்கொண்டார். மதிபீட்டுரையை முன்னாள் விஞ்ஞானபாட ஆசிரிய  ஆலோசகர் க.கணேசகுமார் வழங்கினார்.

சண்டிலிப்பாய் கல்வி கோட்ட கல்விப் பணிப்பாளர் ச.சிவானந்தராசா இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X