Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 14 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன் விழா ஆண்டை முன்னிட்டு திருமறைக் கலாமன்றம் நடத்தி வருகின்ற மாதாந்த நிகழ்ச்சித் தொடரான பொற்தூறல் நிகழ்வின் இம்மாதத்துக்கான நிகழ்வு, பங்குனித் திங்கள் பொற்தூறல் என்னும் கருப்பொருளில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 5 மணிக்கு யாழ்.திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாதத்துக்கான பொற்தூறல் நிகழ்வு பாரம்பரிய தவக்காலப் பண்கள் பாடப்படும் நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
யாக்கோமே கொன்சால்வேஸ் அருந்தவ முனிவரால் இயற்றப்பட்ட இயேசு கிறிஸ்து மானிடர் ஈடேற்றத்துக்காக பூங்காவனத்திலே தொடங்கி சிலுவை மரணம் வரைக்கும் அனுபவித்த பாடுகளின் வரலாறு 9 பிரசங்கங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இந்த பிரசங்கங்களை யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த அண்ணாவிமார்கள், கலைஞர்கள் பங்குகொண்டு தமது பிரதேசங்களில் வழக்கிலுள்ள ராகங்களில் பாடவுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ, இஸ்லாமிய, நாகரிகத்துறை தலைவர் பேராசிரியர் அருட்கலாநிதி ஞானமுத்து பிலேந்திரன் அடிகளார் கலந்துகொள்ளவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Jul 2025