2025 மே 07, புதன்கிழமை

கலாசார பெருவிழா

Sudharshini   / 2015 மார்ச் 19 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச கலாசார பெருவிழா, முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (18) நடைபெற்றது.

இந்நிகழ்வில், அதிதிகள் தண்ணீரூற்று நெடுங்கேணி சந்தியிலிருந்து விழா இடம்பெற்ற முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி மைதானம் வரை, பாரம்பரிய கலாசார நடனங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில், இசைக்கச்சேரி, காளிங்க நாடகம், நுண்கலை கல்லூரி மாணவர்களின் நடனம், இசை நாடகம், கலைவாணி  கலாமன்றத்தினரின் சத்தியவான்-சாவித்திரி நாடகம், வற்றப்பளை மாணவர்களின் நடனம், சரஸ்வதி கலாமன்றத்தினரின் காத்தவராயன் சிந்துநடைக் கூத்துடன் ஊர்த்தி பவனி தமிழ் மற்றும் இஸ்லாமிய பாரம்பரிய பண்பாடுகளை பிரதிபலிக்கும், கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், கரைதுறைப்பற்று பிரதேசத்தில் கலை மற்றும் கலாசார வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய பிரதேசக் கலைஞர்கள் 10 பேர் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், 'சிலம்போசை' என்ற நூலும் வெளியீட்டு வைக்கப்பட்டது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் தி.திரேஸ்குமார் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகம், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சீ.ஏ. மோகனதாஸ், வடமாகாண பண்பாட்டலுவல்கள் பிரதிப்பணிப்பாளர் உஷா சுபலிங்கம், வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், வைத்தியக்கலாநிதி சி.சிவமோகன், வை. ஜவாஹிர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X