2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

மூன்று நூல்கள், தமிழர் நாட்காட்டி வெளியீடு

Princiya Dixci   / 2015 மார்ச் 30 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

நா.வை.குமரிவேந்தனின் 'உலக உயர்தனிச் செம்மொழி செந்தமிழ்', 'தமிழர் இலக்கிய இலக்கணம்' மற்றும் 'தமிழர் மெய்யியல் கோட்பாடு' ஆகிய நூல்களும் தமிழர் நாட்காட்டி வெளியீடும் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது.

கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலை முதல்வர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.இந்தியத் துணைத்தூதர் கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

'தமிழர் தம் மொழியை வேற்றுமொழி கலப்பில்லாமல் தனிச்செம்மொழியில் எழுத மற்றும் வாசிக்கப் பழகவேண்டும். ஆங்கிலம் மற்றும் வடமொழி கலப்படமில்லாத தனித்தமிழ் பெயர்களில் எதிர்கால சந்ததியினர் அழைக்கப்படவேண்டும்' என நூலாசிரியர் தெரிவித்தார்.

அத்தோடு, தமிழர் நாட்காட்டி வருடாந்த கலண்டர் வெளியிடப்பட்டு அதன் முக்கியத்துவம் பற்றியும் விரிவுரையாற்றப்பட்டது.

வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சி.சிவலிங்கராசா மற்றும் முகாமைத்துவ வணிக பீடப்பீடாதிபதி தி.வேல்நம்பி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X